விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!பாஜக ஆட்சியில் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்படும்: ராஜ்நாத் சிங்பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ், திரிணமூல்: பாடம் புகட்டப்படும் - மோடி
/

விருதுநகர் அருகே கருந்திரி தயாரித்த 3 பேர் கைது

விருதுநகர் அருகே குடியிருப்பு பகுதிகளில் அனுமதியின்றி கருந்திரிகளை தயார் செய்ததாக திங்கள்கிழமை 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On :5 அக்டோபர் 2015, 1:29 pm

விருதுநகர் அருகே குடியிருப்பு பகுதிகளில் அனுமதியின்றி கருந்திரிகளை தயார் செய்ததாக திங்கள்கிழமை 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகர் அருகே உள்ளது ஒண்டிப்புலி கிராமம். இங்கு குடியிருப்பு பகுதிகளில் அனுமதியில்லாமல் பட்டாசுகள் உற்பத்தி பயன்படுத்தும் கருந்திரிகளை தயாரித்து வருவதாக ஆமத்தூர் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்ததாம். அதன் அடிப்படையில் காவல் சார்பு ஆய்வாளர் சுரேஷ் தலைமையில் போலீஸார் காலையில்  அப்பகுதியில் திடீர் ரெய்டு செய்தனர்.

அப்போது, ஒண்டிப்புலியைச் சேர்ந்த சங்கரபாண்டி(43), மாரிக்கனி மற்றும் சோமசுந்தரம் வீடுகளில் கருந்திரிகளை தயார் செய்தது தெரியவந்தது. மேலும், அவர்களிடம் இரு்நது 30 கருந்திரி கட்டுக்களையும் பறிமுதல் செய்து ஆமத்தூர் காவல் நிலையத்திற்கு போலீஸார் கொண்டு சென்றனர். இது தொடர்பாக 3 பேர் மீதும் போலீஸார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.