ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 82 பெட்டி பட்டாசுகள் பறிமுதல்: ஒருவர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீட்டில் அனுமதியின்றி, சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 82 பெரிய பெட்டிகளில் இருந்த பட்டாசுகளை போலீஸார் இன்று  பறிமுதல் செய்தனர்.

News image
Updated On :5 அக்டோபர் 2015, 1:53 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீட்டில் அனுமதியின்றி, சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 82 பெரிய பெட்டிகளில் இருந்த பட்டாசுகளை போலீஸார் இன்று  பறிமுதல் செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர், நக்கமங்கலத்தில் குறிப்பிட்ட ஒரு வீட்டில் அனுமதியின்றி, சட்ட விரோதமாக் பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சிவகாசி தனி வட்டாட்சியருக்கு தகவல் வந்தது. இதன் பேரில் அவர் தலைமையில் மல்லி போலீஸ் சார்பு ஆய்வாளர் மகேஸ்வரி மற்றும் போலீஸார் பழவேசம் மகன் முருகன் (27) என்பவர் வீட்டை அதிரடியாக சோதனையிட்டனர். அங்கு 33 குரோஸ் சாட்டை வெடி, சோர்ஷா வெடி 46 பெரிய பெட்டிகள், சட்டி வெடி 3 பெரிய பெட்டிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதனை போலீஸார் பறிமுதல் செய்தனர். மல்லி போலீஸ் சார்பு ஆய்வாளர் மகேஸ்வரி வழக்குப் பதிவு செய்து முருகனை கைது செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.