சுகாதாரத்துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான டெங்கு விழிப்புணர்வு முகாம் இன்று நடைபெற்றது.
விருதுநகர் சுகாதார மாவட்ட துணை இயக்குநர் பழனிச்சாமி உத்தரவின் பேரில் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு டெங்கு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதில், அழகாபுரி ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கூரைக்குண்டு ஊராட்சியைச் சேர்ந்த அல்லம்பட்டி சமுதாயக் கூடத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு வட்டார மருத்துவ அலுவலர் அனிதா தலைமை வகித்தார்.
இதில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கலந்து கொண்டு டெங்கு காய்ச்சல் நோய் பரவும் முறை குறித்தும், அதற்கான முன்னேற்பாடுகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விளக்கமாக எடுத்துரைத்தார். அதேபோல், மருத்துவர் ஜெகன் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் அதற்கான சிகிச்சை முறைகள் தொடர்பாகவும் தெரிவித்தார்.
அதையடுத்து, டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் ஏ.டி.எஸ் கொசுக்கள் வாழ்க்கை சுழற்சி குறித்த குறும் படமும் திரையிடப்பட்டது. அதைத் தொடர்ந்து முகாமில் பங்கேற்றோருக்கு நிலவேம்பு கசாயமும் அளிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை வில்வசௌந்தரநாதன், அருண்பாண்டியன் ஆகியோர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிரதமர் மோடியின் உரை தேர்தல் நடத்தை விதிமீறல்: தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிப்போம் - மம்தா

விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23: விடுமுறை நாளில் விதிகளை மீறி இயக்கம்?

அதிமுக - திமுக கூட்டணிக்கு இடையேயான இருமுனைப் போட்டிதான்: அண்ணாமலை

ருதுராஜ் கெய்க்வாட் மிகுந்த அழுத்தத்தில் இருக்கிறார்: அஸ்வின்
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

