விருதுநகரில் ஓடும் பேருந்தில் கைப்பையில் வைத்திருந்த 7 சவரன் நகை மற்றும் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
விருதுநகர் அருகே உள்ள வடமலைக்குறிச்சி தெற்கு தெருவைச் சேர்ந்த கண்ணனின் மனைவி முருகேஸ்வரி(26). இவர் செவ்வாய்கிழமை காலையில் விருதுநகர் அரசு மருத்துவமனையில் இருக்கும் உறவினரை பார்ப்பதற்காக பழைய பேருந்து நிலையத்திலிருந்து பஸ் ஏறிச் சென்றாராம்.
அப்போது, மருத்துவமனையின் முன்பு இறங்கி தான் கொண்டு வந்த கைப்பையை பார்க்கும் போது உள்ளே வைத்திருந்த 7 சவரன் நகை மற்றும் ரொக்கம் ரூ.1500 ஆகியவற்றை யாரோ அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திருடிச் சென்றிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் முருகேஸ்வரி புகார் செய்தார்.
அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து ஓடும் பேருந்தில் கைப்பையில் இருந்த நகை மற்றும் ரொக்கத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கேரளத்தில் கிருஷ்ணர் அசைவ உணவருந்துவதாகச் சித்திரித்து விளம்பரம்: ஹோட்டல் உரிமையாளர்கள் கைது!

அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்

பிரியான்ஷ் ஆர்யா, கூப்பர் கானலி அதிரடி: லக்னௌவுக்கு 255 ரன்கள் இலக்கு!

மேற்கு வங்க தேர்தலுக்குப்பின் மணிப்பூருக்கு கூடுதலாகப் பாதுகாப்புப் படைகள் வருகை: மணிப்பூர் அரசு
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

