அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!பாஜக ஆட்சியில் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்படும்: ராஜ்நாத் சிங்பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ், திரிணமூல்: பாடம் புகட்டப்படும் - மோடி
/

விருதுநகரில் ஓடும் பேருந்தில் கைப்பையிலிருந்த 7 சவரன் நகை திருட்டு

விருதுநகரில் ஓடும் பேருந்தில் கைப்பையில் வைத்திருந்த 7 சவரன் நகை மற்றும் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On :6 அக்டோபர் 2015, 1:36 pm

விருதுநகரில் ஓடும் பேருந்தில் கைப்பையில் வைத்திருந்த 7 சவரன் நகை மற்றும் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

விருதுநகர் அருகே உள்ள வடமலைக்குறிச்சி தெற்கு தெருவைச் சேர்ந்த கண்ணனின் மனைவி முருகேஸ்வரி(26). இவர் இன்று காலையில் விருதுநகர் அரசு மருத்துவமனையில் இருக்கும் உறவினரை பார்ப்பதற்காக பழைய பேருந்து நிலையத்திலிருந்து பஸ் ஏறிச் சென்றாராம். அப்போது, மருத்துவமனையின் முன்பு இறங்கி தான் கொண்டு வந்த கைப்பையை பார்க்கும் போது உள்ளே வைத்திருந்த 7 சவரன் நகை மற்றும் ரொக்கம் ரூ.1500  ஆகியவற்றை யாரோ அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திருடிச் சென்றிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் முருகேஸ்வரி புகார் செய்தார்.

அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து ஓடும் பேருந்தில் கைப்பையில் இருந்த நகை மற்றும் ரொக்கத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.