திமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!பாஜக ஆட்சியில் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்படும்: ராஜ்நாத் சிங்பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ், திரிணமூல்: பாடம் புகட்டப்படும் - மோடி
/

விருதுநகரில் முறைகேடு செய்த விற்பனையாளர்களுக்கு ரூ.29350 அபராதம்

விருதுநகரில் முறைகேடு செய்த விற்பனையாளர்களுக்கு ரூ.29350 வரையில் அபராதம் விதித்து கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சி.குருமூர்த்தி நடவடிக்கை எடுத்துள்ளார்.

Updated On :6 அக்டோபர் 2015, 1:42 pm

விருதுநகரில் முறைகேடு செய்த விற்பனையாளர்களுக்கு ரூ.29350 வரையில் அபராதம் விதித்து கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சி.குருமூர்த்தி நடவடிக்கை எடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் கூட்டுறவு நியாய விலைக்கடைகளில் முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு ரகசிய தகவல் வந்தது.

அதன் அடிப்படையில் பறக்கும் படை குழுவினர் 51 நியாய விலைக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, இருப்புக்குறைவு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதில், முறைகேடுகளில் ஈடுபட்ட விற்பனையாளர்களுக்கு ரூ.29350 வரையில் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.