ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

திருமணமான விவசாய பட்டதாரி மாணவி தற்கொலை

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருமணம் ஆன ஓராண்டில், விவசாய பட்டதாரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

News image
Updated On :6 அக்டோபர் 2015, 12:08 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருமணம் ஆன ஓராண்டில், விவசாய பட்டதாரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

வத்திராயிருப்பு அருகேயுள்ள மகாராஜபுரம், முஸ்லீம் தெருவைச் சேர்ந்தவர் அ.மணிகண்டன் (50). ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது மனைவி சுப்புராணி. இவர் திருமங்கலம் சித்தாலையில் உள்ள கள்ளர் அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். தற்போது இவர்கள் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் குடியிருந்து வருகிறார்கள்.

இவர்களது மகள் பாலகாயத்திரி (22) சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.எஸ்ஸி., விவசாயம் படித்து வருகிறார்.

இவரை மகராஜபுரம், ஜீவாநகரைச் சேர்ந்த சுப்புராஜ் மகன் பாண்டியராஜ் என்பவருக்கு 29.8.14-ம் தேதி திருமணம் முடித்து கொடுத்துள்ளார்கள். பாண்டியராஜ் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார்.

கல்லூரிக்கு விடுமுறை என்பதால் திருமங்கலத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு பாலகாயத்திரி வந்துள்ளார். பின்னர் மகாராஜபுரத்தில் உள்ள மாமனார் வீட்டிற்குச் சென்று வருவதாக பாலகாயத்திரி கூறிச் சென்றுள்ளார். திங்கள்கிழமை அங்கு விஷ மாத்திரைகளை தின்று ஆபத்தான நிலையில் இருந்துள்ளார். வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து மணிகண்டன் வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சிவகாசி கோட்டாட்சியர் இந்த வழக்கு தொடர்பான விசாரணையை மேற்கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.