விருதுநகர் மாவட்டத்தில் பயிர் காப்பீடு செய்யும் விவசாயிகளுக்கு கால அவகாசம் நீட்டிப்பு செய்துள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆட்சியர் வே.ராஜாராமன் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இம்மாவட்டத்தில் நிகழாண்டிற்கான பயிர் காப்பீட்டு திட்டம் தேசிய வேளாண்மை காப்பீட்டு திட்டம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், 12 பயிர்களுக்கு அறிவிக்கப்பட்டு பயிர் காப்பீடு விவசாயிகளிடம் இருந்து பிரிமியம் பெறப்படுகிறது.
இம்மாவட்டத்தில் கம்பு, சோளம், மக்காச்சோளம், துவரை, உளுந்து, கடலை மற்றும் எள் ஆகிய பயிர்களுக்கு கடன்பெறும் விவசாயிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட அறிக்கையின் படி பிரிமியம் செலுத்த செப்.30ம் தேதி ஆகும்.
தற்போது, இக்கால அவகாசம் இம்மாத இறுதி வரையில் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இப்பயிர் செய்துள்ள விவசாயிகள் அனைவரும் இவ்வாய்ப்பை பயன்படுத்தி பயிர் காப்பீடு செய்து பயனடையும் படி அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிரதமர் மோடியின் உரை தேர்தல் நடத்தை விதிமீறல்: தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிப்போம் - மம்தா

விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23: விடுமுறை நாளில் விதிகளை மீறி இயக்கம்?

அதிமுக - திமுக கூட்டணிக்கு இடையேயான இருமுனைப் போட்டிதான்: அண்ணாமலை

ருதுராஜ் கெய்க்வாட் மிகுந்த அழுத்தத்தில் இருக்கிறார்: அஸ்வின்
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

