கலசலிங்கம் பேராசிரியருக்கு சிறந்த இந்திய ஆட்டோமொட்டிவ் சங்க ஆலோசகர் விருது
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழக ஆட்டோமொபைல் துறைத் தலைவர் எம்.உதயகுமாருக்கு, சிறந்த இந்திய ஆட்டோமொட்டிவ் சங்க ஆலோசகர் விருது கிடைத்துள்ளது.


விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழக ஆட்டோமொபைல் துறைத் தலைவர் எம்.உதயகுமாருக்கு, சிறந்த இந்திய ஆட்டோமொட்டிவ் சங்க ஆலோசகர் விருது கிடைத்துள்ளது.
இவர் இந்திய ஆட்டோமொட்டிவ் சங்கத்தின் பேராசிரியர் ஆலோசகராக உள்ளார். மேலும் இவரது துறை மாணவர்களுக்கு பல்வேறு கருத்தரங்குகளை நடத்துவதுடன், அவர்களை பல்வேறு நிறுவனங்களுக்குச் சென்று பயிற்சி மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளார். தேசிய ஆட்டோமொட்டிவ் பொறியாளர் சங்கத்தின் மாநாட்டையும் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் நடத்தியுள்ளார்.
தென்னிந்தியாவில் உள்ள 6 தலைமை பிரிவு இடங்களுள் பணியாற்றும் பேராசிரியர்களுக்குள், பேராசிரியர் உதயக்குமாரை சிறந்த பேராசிரியராக தேர்வு செய்து சிறந்த இந்திய ஆட்டோமொட்டிவ் சங்க ஆலோசகர் விருது இவருக்கு வழகப்பட்டது.
வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற அனைத்திந்திய ஆட்டோமொட்டிவ் பொறியாளர் சங்க மாணவர் மாநாட்டில் இந்த விருதை சென்னை அசோக்லைலேண்ட் துணைத் தலைவர் சடகோபன் கிருஷ்ணன் வழங்கி பாராட்டினார்.
விருது பெற்ற பேராசிரியர் உதயகுமாரை, பல்கலைக்கழகத்தின் வேந்தர் க.ஸ்ரீதரன், இயக்குமர் எஸ்.சசிஆனந்த், துணை வேந்தர் ச.சரவணசங்கர், பதிவாளர் வெ.வாசுதேவன் உள்ளிட்டோர் பாராட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...