சாத்தூரில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கத்தியால் குத்தி படுகொலை செய்த மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
சாத்தூர் பாரதிநகரைச் சேர்ந்த கார்வண்ணமூர்த்தியின் மனைவி அய்யம்மாள்(43). இவர்கள் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்று பிற்பகல் வீட்டில் தனியாக இருந்தாராம். அப்போது, மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து அய்யமாளை கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்கள் வீட்டிற்குள் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சாத்தூர் டி.எஸ்.பி.குமார், நகர் காவல் நிலைய போலீஸார் சிவகுமார் மற்றும் கைரேகை நிபுணர்கள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
இதுகுறித்து சாத்தூர் நகர் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த மர்ம நபர்கள் யார் என்பது தொடர்பாகவும், கொலைக்கான காரணம் குறித்தும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிரதமர் மோடியின் உரை தேர்தல் நடத்தை விதிமீறல்: தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிப்போம் - மம்தா

விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23: விடுமுறை நாளில் விதிகளை மீறி இயக்கம்?

அதிமுக - திமுக கூட்டணிக்கு இடையேயான இருமுனைப் போட்டிதான்: அண்ணாமலை

ருதுராஜ் கெய்க்வாட் மிகுந்த அழுத்தத்தில் இருக்கிறார்: அஸ்வின்
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

