பட்டதாரி ஆசிரியையைக் காணவில்லை: தந்தை புகார்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டதாரி ஆசிரியையைக் காணவில்லை என்று அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.


விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டதாரி ஆசிரியையைக் காணவில்லை என்று அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
வத்திராயிருப்பு-கோட்டையூரைச் சேர்ந்தவர் க.பெருமாள் (48). இவரது மகள் தங்கம் (27). கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் பி.ஏ., பி.எட்., படிப்பு முடித்துள்ளார். கடந்த ஓராண்டாக சென்னையில் உள்ள காதுகேளாதோர் மற்றும் வாய்பேச இயலாதோருக்கான பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறாராரம். உடல் நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த வாரம் வீட்டிற்கு வந்த தங்கம், மனநிலை பாதிக்ப்பட்டவர்போல நடந்துள்ளார். இதற்கான சிகிச்சை பெற்று வந்த நிலையில் செவ்வாய்கிழமை பெருமாள் வேலைக்குச் சென்றுவிட்டு மாலை வீடு வந்து பார்த்தபோது தங்கத்தைக் காணவில்லையாம். பல இடங்களில் தேடியும் கிடைக்காததையடுத்து இன்று வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து தங்கத்தை தேடி வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...