கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

பள்ளிகளில் அக்.15-ம் தேதி உலக கை கழுவும் நாள் நடத்த உத்தரவு

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் முழு சுகாதார தமிழகம், தூய்மையான பாரதம்-தூய்மையான பள்ளி என்ற நோக்கத்துடன் உலக கை கழுவும் நாளை அக்டோபர் 15-ம் தேதி அனுசரிக்க அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி உத்தரவிட்டுள்ளார்.

News image
Updated On :11 அக்டோபர் 2015, 10:00 am

கோ.ஜெயக்குமார்

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் முழு சுகாதார தமிழகம், தூய்மையான பாரதம்-தூய்மையான பள்ளி என்ற நோக்கத்துடன் உலக கை கழுவும் நாளை அக்டோபர் 15-ம் தேதி அனுசரிக்க அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அனைவருக்கும் கல்வி இயக்க ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார வளமைய மேற்பார்வையாளர் எஸ்.மாடசாமி, வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி உலக கைகழுவும் நாளை மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் அனுசரிக்க உத்தரவிட்டுள்ளார்.

பள்ளிகளில் முழு சுகாதார தமிழகம் என்பது தமிழக அரசின் முக்கிய நோக்கமாக உள்ளது. இத்திட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாக தமிழகத்திலுள்ள ஒவ்வொரு பள்ளியும் தேவையான தண்ணீர் வசதி, சுகாதார வசதிகளுடன் பசுமையான சூழலை உள்ளடக்கிய அடிப்படை வசதிகளைப் பெற்று அவற்றை நல்ல முறையில் பராமரிப்பதற்கான செயல்பாடுகளை செயல்படுத்தி மேம்படுத்துவது ஆகும்.

இதற்காக ஆசிரியர்களுக்கு அனைவருக்கும் கல்வி இயக்கமும் யுனிசெப் நிறுவனமும் இணைந்து மாநில அளவில் மற்றும் மாவட்ட அளவில் பயிற்சிகள் அளித்துள்ளது. மேலும் பள்ளி கட்டமைப்பினை சரி செய்யும் பொருட்டு 2015-16 கல்வியாண்டு அனைவருக்கும் கல்வி திட்டத்தில் வழங்கப்பட்டுள்ள பராமரிப்பு நிதியில் அனைத்து பள்ளிகளில் மாணவர்களுக்குத் தேவையான குடிநீர் வசதியினை மேம்பாடு செய்து தொடர்ந்து தண்ணீர் வசதி கிடைக்கும் வகையில் பழுது மற்றும் பராமரிப்பு பணி மேற்கொள்ளவும், மொத்த பள்ளி மாணவர்களுக்குத் தேவையான போதுமான எண்ணிக்கையில் குழாய் வசதி செய்யப்பட வேண்டும்.

தற்போது அக்டோபர் 15-ம் தேதி உலக கை கழுவும் நாளை முன்னிட்டு பள்ளிகளில் சுகாதாரத்தினை மேம்பாடு செய்திட வேண்டும்.

கைகழுவும் முறைகள், அதற்கான முக்கியத்துவம் குறித்து அனைத்துப் பள்ளிகளில் அன்றைய தினம் காலை பிரார்த்தனைக் கூட்டத்தில் மாணவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

மாணவர்கள் கழிப்பறை பயன்பாட்டிற்கு முன்னும், மதிய உணவு இடைவேளையின் போது உணவு எடுத்துக்கொள்ளும் முன்னும் பின்னும் கைகழுவுவதை உறுதி செய்ய வேண்டும்.

மாணவர்கள் கைகழுவிட தேவையான சோப்பு, சோப்பு தண்ணீர், சோப்பு எண்ணெய் போன்ற வசதிகள் செய்து தர வேண்டும்.

இவற்றை அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களும் பள்ளியில் தொடர்ந்து தினசரி பின்பற்றிட அறிவுருத்தப்படுவதாயும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் மாடசாமி செய்திக் குறிப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.