ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

கடையை சேதப்படுத்தி, கடைக்காரருக்கு மிரட்டல்: இருவர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கடைகளைச் சேதப்படுத்தி, கடைக்காரரை மிரட்டிய இருவரை போலீஸார் கைது செய்தனர்.

News image
Updated On :14 அக்டோபர் 2015, 2:05 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கடைகளைச் சேதப்படுத்தி, கடைக்காரரை மிரட்டிய இருவரை போலீஸார் கைது செய்தனர்.

வத்திராயிருப்பு, நாடார் தெருவைச் சேர்ந்தவர் த.காசிராஜன் (52). இவர் நாடார் பஜாரில் இட்லிக்கடை வைத்துள்ளார். நேற்று(செவ்வாய்கிழமை) இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை அடைக்க பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு மேலப்பாளையத்தைச் சேர்ந்த ச.சிறுத்தை (எ) லிங்கம் (24), கூ.செந்தில்குமார் (24) ஆகிய இருவர் வந்து இட்லி கேட்டுள்ளார்கள். காசிராஜன் இட்லி முடிந்துவிட்டது என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமுற்ற இருவரும் நாங்க கேட்டு இல்லைன்னு எப்படி சொல்லலாம் என்று கூறி, கடையின் பல்புகளை அடித்து உடைத்துள்ளனர். பக்கத்துக் கடையைச் சேர்ந்த முத்துக்குமார் கடையை சேதப்படுத்திக் கொண்டிருந்த இருவரையும கண்டிதுள்ளார். அவரையும் ஆபாசமாகப் பேசி, அவரது கடையின் மின்வயர்களை இருவரும் அறுத்து எறிந்துள்ளார்கள். பின்னர் பெரிய கட்டைகளைக் காட்டி நாளைக்கு இங்கு இருவரது கடைகளும் இருக்கக் கூடாது என்று கூறி மிரட்டிச் சென்றுள்ளார்கள்.

இது குறித்து காசிராஜன், வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து சிறுத்தை (எ) லிங்கம், செந்தில்குமார் ஆகியோரைக் கைது செய்து, ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 1-ல் முன்னிலைப்படுத்தி காவலில் வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.