எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் விதியை மீறி மணல் எடுப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பாளையங்கோட்டையில் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் விதியை மீறியை மணல் எடுப்பதாக புகார் தெரிவித்து பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :14 அக்டோபர் 2015, 1:37 pm

ஷேக் அப்துல்காதர்

பாளையங்கோட்டையில் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் விதியை மீறியை மணல் எடுப்பதாக புகார் தெரிவித்து பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டினை தூர் வார வேண்டும் என பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் அணைக்கட்டியில் விதியினை மீறி மணல் அள்ளப்படுகிறது. இதற்கு ஆட்சேபம் தெரிவித்தும், அணையில் கூட்டு குடிநீர் திட்ட உறைகிணறு அருகே மணல் எடுப்பதை தடை செய்ய வேண்டும். அணையில் தூர்வாரும் பகுதியில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்த வேண்டும்.

அரசியல் கட்சி பிரதிநிதிகள், தன்னார்வலர்களை கொண்ட கண்காணிப்புக்குழு அமைக்க வேண்டும். வண்டல் மண் என்ற பெயரில் மணல் அள்ளுவதை நிறுத்த வேண்டும். வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கவேண்டும்.

அணையில் முழுமையாக தூர் வாரும்பணி மேற்கொள்வதுடன் கரையினை பலப்படுத்த வேண்டும். அணையில் தேங்கியுள்ள அமலைச் செடிகள், முட்செடிகள், களிமண் ஆகியவற்றை மழைக்கு முன்பாக போர்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி தாமிரவருணி அணை தூர்வாரும் பணி மேம்பாட்டுக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாளையங்கோட்டையில் தாமிரவருணி வடிநிலக் கோட்ட அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எம்.எஸ். ராஜா தலைமை வகித்தார். தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாமக செயலர் ஜி. லிங்கராஜ், நாடாளும் மக்கள் கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலர் எஸ். துர்க்கைலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

காங்கிரஸ் கட்சியின் இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலர் டி. காமராஜ், பாட்டாளி மக்கள் கட்சியின் ஒன்றிய செயலர்கள் ஆர். ஜெகன், கோயில்ராஜ், ரவிசங்கர், முத்துராமன், வழக்குரைஞர் ஆர். பாரதிமுருகன், ஊழல் தடுப்பு-மக்கள் நுகர்வோர் பாதுகாப்பு பேரவையின் மாவட்டச் செயலர் ஜாபர், நிர்வாகச்செயலர் கல்லைசிந்தா, ஸ்ரீவைகுண்டம் தாலுகா செயலர் லட்சுமணன், இனப்படுகொலைக்கு எதிரான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பீட்டர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.