விருதுநரில் அட்டூழியம்: இரு சக்கர வாகனத்தில் வந்த ஆசிரியையை கீழே தள்ளி நகை பறிப்பு
விருதுநகரில் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த அரசுப் பள்ளி ஆசிரியையை கீழே தள்ளிவிட்டு நகையைப் பறித்துச் சென்ற நபரை போலீஸார் தேடி வருகிறார்கள்.


விருதுநகரில் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த அரசுப் பள்ளி ஆசிரியையை கீழே தள்ளிவிட்டு நகையைப் பறித்துச் சென்ற நபரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
விருதுநகர், கருப்பசாமி நகரைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி வளர்மதி (48). இவர் மீசலூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார். வியாழக்கிழமை மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு தனது இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். மீசலூர் விலக்கு ரோட்டில், சாய்பாபா கோவில் அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த ஒருவர் ஆசிரியை வளர்மதியை வழிமறித்து ஏதோ கேட்பது போல நடித்து, அவரைக் கீழே தள்ளிவிட்டு அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றுள்ளார்.
இந்தச் சூழ்நிலையிலும் வளர்மதி, தனது செயினை இறுகபிடித்துக் கொண்டார். செயினை பறித்த நபர் கையில் பாதி செயின் கிடைத்துள்ளது. அந்த செயினுடன் வழிப்பறியில் ஈடுபட்ட நபர் தப்பி ஓடிவிட்டார்.
இது குறித்து சூலக்கரை காவல் நிலையத்தில் வளர்மதி புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடிய நபரைத் தேடி வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...