யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி படுகாயம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் மூதாட்டி படுகாயம் அடைந்தார். விபத்தை ஏற்படுத்திவிட்டு வண்டியை போட்டு விட்டு தப்பி ஓடிய இளைஞரை போலீஸார் தேடி வருகிறார்கள்.

News image
Updated On :17 அக்டோபர் 2015, 2:02 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் மூதாட்டி படுகாயம் அடைந்தார். விபத்தை ஏற்படுத்திவிட்டு வண்டியை போட்டு விட்டு தப்பி ஓடிய இளைஞரை போலீஸார் தேடி வருகிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர், கிருஷ்ணன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் முனியசாமி மனைவி ஆதிலட்சுமி (73). இவர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் இன்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு, கீழரதவீதியில் தேரடி அருகே நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்  ஆதிலட்சுமி மீது மோதிவிட்டு, வண்டியை அதே இடத்தில் போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். படுகாயம் அடைந்த ஆதிலட்சுமி ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் போலீஸார் விசாரித்ததில் வண்டி நக்கமங்கலத்தைச் சேர்ந்த செ.பெரியகாளிமுத்து என்பவர் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, வண்டியை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய இளைஞரைத் தேடி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.