ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

7-ம் வகுப்பு படிக்கும் மலைவாழ் இன சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம்: இளைஞர் கைது

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள மலைவாழ் இன 7-ம் வகுப்பு படிக்கும் சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

News image
Updated On :17 அக்டோபர் 2015, 3:55 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள மலைவாழ் இன 7-ம் வகுப்பு படிக்கும் சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள செண்பகத்தோப்பு, பளியர் குடியிருப்பைச் சேர்ந்தவர் முருகன். இவரது 13 வயது மகள் மம்சாபுரம், பசும்பொன் உயர்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இதே இடத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன்தேவர் மகன் சபரிமலை (23). இவர் செவ்வாய்கிழமை சிறுமியை, மலைக்குள் கடத்திச் சென்று அங்கு வைத்திருந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இது குறித்து வெள்ளிக்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் சோலையம்மாள் புகார் செய்தார். போலீஸார் சபரிமலை மீது கடத்தல், கற்பழித்தல், வன்கொடுமை தடுப்புச் சட்டம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து சபரிமலையை சனிக்கிழமை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சபரிமலை, ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 2-ல் முன்னிலைப்படுத்தப்பட்டார். நீதிபதி பசும்பொன் சண்முகையை, சபரிமலையை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.