எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

நீர்பிடிப்பு பகுதியில் மழை நீடிப்பு: பாபநாசம், சேர்வலாறு அணைகள் மூடல்

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் மழை நீடித்து வருவதால் திங்கள்கிழமை பாபநாசம், சேர்வலாறு அணைகள் மூடப்பட்டன. மணிமுத்தாறு அருவியில் 2 ஆவது நாளாக வெள்ளப்பெருக்கு இருந்தது.

News image
Updated On :19 அக்டோபர் 2015, 12:18 pm

ஷேக் அப்துல்காதர்

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் மழை நீடித்து வருவதால் திங்கள்கிழமை பாபநாசம், சேர்வலாறு அணைகள் மூடப்பட்டன. மணிமுத்தாறு அருவியில் 2 ஆவது நாளாக வெள்ளப்பெருக்கு இருந்தது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியிலும், திருநெல்வேலி மாவட்டத்தில் பரவலாக கடந்த 2 தினங்களாக மழை பெய்து வருகிறது. திங்கள்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை (மில்லி மீட்டரில்): பாபநாசம் அணை 52, பாபநாசம் கீழ் அணை 50, சேர்வலாறு அணை 32, மணிமுத்தாறு அணை 46.4, கடனாநதி அணை 3, ராமநதி அணை 23, கருப்பாநதி அணை 15, குண்டாறு அணை 57, அடவிநயினார் அணை 6, நம்பியாறு அணை 23, கன்னடியன் அணைக்கட்டு 41, கொடுமுடியாறு அணை 5.

அம்பாசமுத்திரம் 25.1, சேரன்மகாதேவி 30, தென்காசி 40, செங்கோட்டை 53, ஆய்க்குடி 30.2, ஆலங்குளம் 50.2, மூலக்கரைப்பட்டி 28, நான்குனேரி 24, ராதாபுரம் 14, களக்காடு 14.2, பாளையங்கோட்டை 20, திருநெல்வேலி 11.4.

நீர்மட்டம் உயர்வு: நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் அணைகளின் நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 950 கனஅடியும், சேர்வலாறு அணைக்கு விநாடிக்கு 600 கனஅடியும், மணிமுத்தாறு அணைக்கு 325 கனஅடியும், கடனாநதி அணைக்கு 101.05 கனஅடியும், ராமநதி அணைக்கு விநாடிக்கு 147.31 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.

நீர்வரத்து அதிகரித்ததை அடுத்து பாபநாசம் அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 64.10 அடி, சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 77.43 அடி, மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 59.60 அடி, கடனாநதி அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 44 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 3.25 அடி உயர்ந்து 43 அடியாகவும் இருந்தது.

கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 50.83 அடி, அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 68.50 அடி, வடக்குப்பச்சையாறு அணையின் நீர்மட்டம் 22.50 அடி, கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 13 அடியாகவும் இருந்தது.

அணைகள் மூடல்: அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் நீடித்து வரும் மழையால் பாபநாசம், சேர்வலாறு அணைகள் திங்கள்கிழமை காலை மூடப்பட்டது. மணிமுத்தாறு அணை ஏற்கனவே மூடப்பட்டுள்ளது. மணிமுத்தாறு அருவியில் 2 ஆவது நாளாக வெள்ளப்பெருக்கு இருந்தது. இதனால் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினர் அனுமதிக்கவில்லை.

குளிக்க அனுமதி: தென்காசி, செங்கோட்டையில் மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையால் குற்றாலம் ஐந்தருவி, பேரருவி, பழைய குற்றாலம் அருவிகளில் திடீரென கடும் வெள்ளம் ஏற்பட்டது. திங்கள்கிழமை அருவிகளில் நீர்வரத்து குறைந்ததை அடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.