யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

குழந்தைகளை பாலியல் தொந்தரவு செய்த இருவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

குழந்தைகளுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்து வந்த இருவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.ராஜாராமன் உத்தரவிட்டார்.

News image
Updated On :25 அக்டோபர் 2015, 11:54 am

கோ.ஜெயக்குமார்

குழந்தைகளுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்து வந்த இருவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.ராஜாராமன் உத்தரவிட்டார்.

விருதுநகர் அருகேயுள்ள தம்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் பட்டாசு தொழிலாளி தங்கவேல் (45). அந்த கிராமத்தில் உள்ள பள்ளியில் குழந்தைகளுக்கு பாலியல் விழிப்புணர்வு வகுப்பு நடைபெற்றுள்ளது. இது போன்று யாராவது தொந்தரவு கொடுத்தால் பள்ளியில் கூறலாம் என்று கூறியுள்ளார்கள்.

இதன் தொடர்ச்சியாக பள்ளியில் படிக்கும் 5 முதல் 10 வயது வரையுள்ள 8 குழந்தைகள், தங்கவேல் தங்களுக்கு செல்போனில் ஆபாச படம் காட்டி பாலியல் தொல்லை கொடுத்தாக செப்டம்பர் 25 ஆம் தேதி புகார் செய்தனர்.

இது குறித்து விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தங்கவேல் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

சிவகாசியைச் சேர்ந்த குழந்தைவேலு (27) என்பவர் 9 வயதுள்ள இரு குழந்தைகளை ஆகஸ்டு 31 ஆம் தேதி பாலியல் பலாத்காரம் செய்ததான புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

தங்கவேல் மற்றும் குழந்தைவேலு ஆகிய இருவரையும் குண்டர் தடுப்புக் காவலில் வைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சு.மகேஸ்வரன், மாவட்ட ஆட்சித் தலைவருக்கு பரிந்துரைத்தார். இதன் பேரில் ஆட்சித் தலைவர் வே.ராஜாராமன் இருவரையும் குண்டர் தடுப்புக் காவலில் வைக்க இன்று உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.