யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் போலி பெண் டாக்டர் கைது

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் போலி பெண் டாக்டரை போலீஸார் புதன்கிழமை இரவு கைது செய்தனர்.

News image
Updated On :29 அக்டோபர் 2015, 12:31 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் போலி பெண் டாக்டரை போலீஸார் புதன்கிழமை இரவு கைது செய்தனர்.

விருதுநகர், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் மற்றும் குடும்ப நலம் துணை இயக்குநர் டாக்டர் முத்து வீரலட்சுமிக்கு, ஸ்ரீவில்லிபுத்தூர், மங்காபுரம் மேல்பக்கம் வடக்குத் தெருவில் மகாலிங்கம் மனைவி சுகுனா (32) என்பவர், மருத்துவப் பட்டம் பெறாமல் போலியாக மருத்துவம் செய்து கொண்டிருப்பதாக தகவல் வந்தது.

இதன் பேரில் முத்து வீரலட்சுமி தனது மருத்துவக் குழுவினருடன் குறிப்பிட்ட வீட்டை திடீர் ஆய்வு செய்தார். அப்போது சுகுனா, நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்துள்ளார். இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் டாக்டர் முத்து வீரலட்சுமி புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து சுகுனாவைக் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.