விழுப்புரத்தில் ரயில், பேருந்து மறியல்: இந்திய கம்யூனிஸ்ட் அறிவிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் புதன்கிழமையன்று ரயில் மற்றும் பேருந்து மறியல் நடைபெற உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் புதன்கிழமையன்று ரயில் மற்றும் பேருந்து மறியல் நடைபெற உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இக்கட்சியின் மாவட்டச் செயலர் ஏ.வி.சரவணன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தப்பட வேண்டும். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு, தற்போதுள்ள வேலைகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

சாலைப் பாதுகாப்பு மசோதாவை திரும்பப் பெறுதல், பன்னாட்டு, இந்திய பெரும் முதலாளிகளின் நலன்களுக்காக இந்தியத் தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்தம் செய்வதை எதிர்த்தும், பொதுத்துறை பங்குகளை தனியாருக்கு விற்கக்கூடாது என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து மத்திய தொழிற்சங்கங்கள், வங்கி இன்சூரன்ஸ் உள்ளிட்ட அமைப்புகளின் தொழிற்சங்கங்களும் நாடு முழுவதும் பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்க உள்ளன.

விவசாய விளைபொருளுக்கு நியாய விலை கேட்டும், விவசாயத் தொழிலாளர்களுக்கான வேலை உறுதியளிப்பு திட்டத்தை மேலும் விரிவுப்படுத்த வேண்டும். அரசுத்துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை பூர்த்தி செய்யவும், புதிய வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும்.

பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இடதுசாரி தொழிற்சங்கங்கள், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர் அமைப்புகள், இளைஞர் அமைப்புகள் புதன்கிழமை ரயில், சாலை மறியல் நடத்த உள்ளனர்.

மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம், சின்னசேலம், அரகண்டநல்லூர் ஆகிய இடங்களில் ரயில் மறியலும், மாவட்டத்தின் 30-க்கும் மேற்பட்ட மையங்களில் சாலை மறியலும் நடைபெற உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com