விருதுநகர் அருகே ஆசைவார்த்தை கூறி இளம்பெண்ணை மானபங்கம் செய்து விட்டு திருமணத்திற்கு மறுத்த இளைஞரை போலீஸார் இன்று கைது செய்தனர்.
விருதுநகர் அருகே இனாம்ரெட்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்த தாமஸ் என்பவரின் மகள் ஐஸ்வர்யா(19). சூலக்கரை பகுதியைச் சேர்ந்த பசும்பொன் என்பவரின் மகன் அசோக்குமார்(26). இப்பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் வேலை வேலை செய்து வருகின்றனர். அதையடுத்து கடந்த ஓராண்டாக பழகியும் வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு இனாம்ரெட்டிபட்டியில் வீட்டில் தனியாக இருந்த ஐஸ்வர்யாவை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி குல்லூர்சந்தை-வள்ளிகுளம் சாலைப்பகுதியில் மறைவிடத்திற்கு அழைத்துச் சென்று மானபங்கம் செய்தாராம்.
அதையடுத்து, பகல் முழுவதும் அப்பகுதியில் சுற்றி திரிந்துவிட்டு இரவில் இனாம்ரெட்டிபட்டி விலக்கில் வாகனத்தில் இறக்கி விட்டு எங்கள் வீட்டில் உன்னை திருமணம் செய்ய மறுப்பதாக கூறியதோடு, மறந்துவிடவும் கூறினாராம்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஐஸ்வர்யா அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து மானபங்கம் செய்து விட்டு இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுத்த அசோக்குமாரை போலீஸார் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தவெக வேட்பாளரை ஆதரித்து நடிகா் ராமராஜன் பிரசாரம்!
சங்கரன்கோவிலில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

நாட்டிலேயே வளா்ச்சியில் தமிழகம் முதன்மை! - கே.வி. தங்கபாலு

குடிபோதையில் தகராறு செய்த தம்பி வெட்டிக் கொலை; அண்ணன் கைது
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

