இலுப்பூர் அருகே குடும்பப் பிரச்னை காரணமாக தூக்கிட்டு பெண் தற்கொலை
இலுப்பூர் அருகே திங்கள்கிழமை மாலை பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


இலுப்பூர் அருகே திங்கள்கிழமை மாலை பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இலுப்பூர் அருகேயுள்ள எருதுபட்டியைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி மனைவி குஞ்சம்மாள்(43) இவர்களுக்கு கடந்த 24 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 4 பெண், 2 ஆண் பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் அப்பகுதிகளில் ஆடு வளர்ப்பு தொழில் செய்து வருகிறார்கள். இந்நிலையில் இன்று மாலை வீட்டில் யாரும் இல்லாத போது ஆடுகட்டும் கயிறு மூலம் வீட்டு உத்திரத்தில் குஞ்சம்மாள் தூக்கிட்டு தற்கொலை கொண்டுள்ளார்.
தகவலறிந்து வந்த இலுப்பூர் காவல் துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல் ஆய்வாளர் எஸ். வேலுச்சாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...