விருதுநகர் பாணடியன் கிராம வங்கியில் சர்வதேச எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு நவீன முறையில் பணபரிமாற்றம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
பாண்டியன் கிராம வங்கி, தேசிய விவசாய வளர்ச்சி கிராமப்புற வளர்ச்சி வங்கி மற்றும் என்.பி.சி.ஐ (national corporation of india) ஆகிய அமைப்புகள் இணைந்து நவீன முறையில் ஏ.டி.எம், ஆன்லைன் முறையில் பணபரிமாற்றம் செய்வது தொடர்பாக வாடிக்கையாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
பாண்டியன் கிராம வங்கியின் மண்டல நிர்வாக அலுவலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைவர் எஸ்.கார்த்திகேயன் தலைமை வகித்தார். இதில், நபார்டு வங்கியின் துணை பொது மேலாளர், பாண்டியன் கிராம வங்கியின் இயக்குநர் எஸ்.என்.மாலிக் பங்கேற்று பேசுகையில், இன்றைய நாளில் பணபரிமாற்றம் மேற்கொள்வதற்கு அனைவரும் நவீன முறையை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். கிராமப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும் பயன்படுத்துவதற்காகவே ரூபே அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த அட்டைகள் மூலம் ஆன்லைனில் பணபரிமாற்றம் குறித்தும், வங்கி வரவு, செலவு மற்றும் கடன் விவரங்களை உடனுக்கு உடன் அறிந்து கொள்ள முடியும். இந்த வசதிகளை கிராமமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த அட்டைகள் மூலம் எவ்வாறு ஆன்லைன், இ.ஜி.ஜி உள்ளிட்ட முறைகளில் நம் கணக்கிலிருந்து, அடுத்தவர்கள் கணக்கிற்கு பணபரிவர்த்தனை நடைபெறுகிறது என்பது குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார். அதையடுத்து, வாடிக்கையாளர்களிடம் ஆன்லைன் மூலம் பணபரிவர்த்தனை செய்வது தொடர்பான விழிப்புணர்வு கையேடுகளையும் அவர் வழங்கினார்.
இதில், பாண்டியன் கிராம வங்கியின் பொதுமேலாளர் பால்சாமிராஜ், நபார்டு வங்கியின் விருதுநகர் மாவட்ட மேலாளர் சுப்பிரமணியன், மண்டல இயக்குநர் ஐ.ராமச்சந்திரன், ஊரக வளர்ச்சித்துறையின் திட்ட இயக்குநர் சுரேஷ் ஆகியோர் நவீன முறையில் ரூபே கார்டுகளை எந்தெந்த முறையில் பயன்படுத்தலாம் என்பது குறித்து கிராம பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எடு்த்துரைத்தனர்.
இம்முகாமில் நிறைவாக வங்கியின் பொதுமேலாளர் ஜி.மோகன் நன்றி கூறினார். இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தவெக வேட்பாளரை ஆதரித்து நடிகா் ராமராஜன் பிரசாரம்!
சங்கரன்கோவிலில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

நாட்டிலேயே வளா்ச்சியில் தமிழகம் முதன்மை! - கே.வி. தங்கபாலு

குடிபோதையில் தகராறு செய்த தம்பி வெட்டிக் கொலை; அண்ணன் கைது
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


