வேளாண் பொறியியல் துறை சார்பில் இன்று நடந்த நிகழ்ச்சியில் விவசாயிகள் குழுக்களுக்கு பருப்பு உடைக்கும் மில் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கிருஷ்ணன்கோவில் வேளாண் பொறியியல் துறை அலுவலக வளாகத்தில் காரியாபட்டி சிறுதானிய விவசாய உற்பத்தியாளர் கம்பெனி மூலம் விவசாயிகள் குழுக்களுக்கு பருப்பு உடைக்கும் மில் செயல்பாடுகள் குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் ஆறுமுகநயினார் தலைமை வகித்தார். வேளாண் விற்பனை மற்றும் வணிக துறையின் துணை இயக்குநர் முத்துமுனியாண்டி முன்னிலை வகித்தார்.
இதில், கிராமப்புற பகுதி விவசாயிகள் குழுக்களுக்கு பயிர் தொழிலுடன், கூடுதல் தொழிலாக பருப்பு உடைக்கும் ஆலை தொழில் செய்வதற்கான பயிற்சியும் அளிக்கப்பட்டது. இந்த ஆலை மூலம் மிகவும் பயனுள்ள முறையில் எளிதாகவும், அதிக செலவில்லாமலும் எளிய முறையில் பருப்புகளை உடைக்க முடியும். மேலும், இந்த ஆலையின் செயல்பாடுகள் குறித்து வேளாண் துறை செயற்பொறியாளரிடம் விவசாயிகள் விளக்கமாக கேட்டறிந்தனர். அதோடு, செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது.
இதில், பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் குழுவினர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சிவகாசி வருவாய் கோட்ட வேளாண் அலுவலர் பா.ரவி உள்ளிட்ட அதிகாரிகள் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் தோட்டத் தொழிலாளா்களுக்கு வீடு! முன்னாள் அமைச்சா் எஸ்.பி. வேலுமணி

பேச்சிப்பாறையில் பழங்குடி மக்களிடம் மாா்க்சிஸ்ட் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

வேட்பாளா்களின் சின்னம் அடங்கிய வாக்குச்சீட்டு பொருத்தும் பணி நிறைவு

அரசு மதுபானக் கடைகளுக்கு ஏப்.21 முதல் 23 வரை விடுமுறை
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

