தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகள், விமானங்களில் கட்டணம் கடும் உயா்வு19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇறுதிக் கட்டத்தை எட்டியது அரக்கோணம் புறவழிச் சாலை பணி!அடுத்த வாரம் இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ!

திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

முக்கிய பிரச்னைகளை வலியுறுத்தி, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பேரவையில் இருந்து திங்கள்கிழமை வெளிநடப்பு செய்தன.

Updated On :

முக்கிய பிரச்னைகளை வலியுறுத்தி, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பேரவையில் இருந்து திங்கள்கிழமை வெளிநடப்பு செய்தன.
 சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ், முதல்வர் ஜெயலலிதா அறிக்கை வாசித்த பிறகு, முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்க வேண்டுமென, பேரவை திமுக குழுத் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
 அப்போது பேசிய பேரவைத் தலைவர் பி.தனபால், "நீங்கள் (திமுக) கொடுத்த பிரச்னை எனது ஆய்வில் உள்ளது. எனவே, அதுகுறித்து பதில் பெறப்பட்ட பிறகு விவாதத்துக்கு எடுக்கப்படும்' என்றார்.
 இதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அப்போது பேசிய பேரவைத் தலைவர், ஒரு பிரச்னையை விவாதிக்க வேண்டுமென யாரும் என்னை தொடர்ந்து வற்புறுத்த முடியாது என்றார். இதைத் தொடர்ந்து, திமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்புச் செய்தனர்.
 அதன்பின், இடதுசாரிக் கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்களும் முக்கிய பிரச்னை குறித்து விவாதிக்க எழுந்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேரவை குழுத் தலைவர் அ.சௌந்தரராசன், கடந்த 2-ஆம் தேதி நடந்த வேலைநிறுத்தப் போராட்டத்தின் போது, பாலகிருஷ்ணன் எம்எல்ஏவை தாக்கிய காவலர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து பேச அனுமதிக்க வேண்டும் என்றார்.
 இதே கருத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் எம். ஆறுமுகமும் வலியுறுத்தினார். இந்தப் பிரச்சனை எனது ஆய்வில் உள்ளது என்றும், இப்போது விவாதிக்க முடியாது எனவும் பேரவைத் தலைவர் ப. தனபால் அனுமதி மறுத்துவிட்டார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இடதுசாரி கட்சி உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்தனர்.
 புதிய தமிழகம், காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும் பேரவையில் இருந்து வெளிநடப்புச் செய்தனர். பின்னர் அனைவரும் அவை நடவடிக்கைகளில் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.