தேர்தல் ஆணைய அனைத்துக் கட்சி கூட்டம்: தவெக, திமுக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு!வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது!தங்கம் விலை தொடர்ந்து 5-ஆவது நாளாக சரிவு!அடுத்த 2 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 24 மாவட்டங்களில் மழை!திருவண்ணாமலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறைவிழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறைவிலங்குகளிலிருந்து பரவும் ‘ஷமோண்டா’ தீநுண்மி: பிரான்ஸில் முதல் மனித பாதிப்புவார இறுதி, முகூா்த்த தினம்: 2,725 சிறப்பு பேருந்துகள் இயக்கம்சென்னையில் ஆவின் பால் விநியோகத்தில் பாதிப்பில்லை: ஆவின் நிா்வாகம்தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான எந்தவொரு பதவிநீக்க தீா்மானமும் விதிகளின்படி பரிசீலிக்கப்படும்: ஓம் பிா்லாஇன்று சென்னைக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கைசுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

2016 சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக ஆட்சியைப் பிடிக்கும்

2016 சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக ஆட்சியைப் பிடிக்கும் என அந்தக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் பேசினார்.

Updated On :

2016 சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக ஆட்சியைப் பிடிக்கும் என அந்தக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் பேசினார்.
 தேமுதிக 11-ஆம் ஆண்டு தொடக்க விழா, மக்களுக்காக மக்கள் நலத்திட்டப் பணிகள், விஜயகாந்த் பிறந்த நாள் விழா உள்ளிட்ட முப்பெரும் விழா திங்கள்கிழமை கோவை, கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது.
 இதில், கட்சித் தலைவர் விஜயகாந்த் பேசியதாவது:
 பெண்களையும், தொண்டர்களையும் தான் தேமுதிக முழுமையாக நம்புகிறது.
 அவர்களது முழு ஆதரவுடன் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம்.
 அண்மையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. காரணம், அதன் உள்கட்டமைப்பு பணிகளை செயல்படுத்துவதற்குள் ஆட்சி முடிவடைந்துவிடும்.
 தேமுதிக கூட்டணி குறித்து சரியான நேரத்தில் முடிவு செய்யப்படும்.
 தற்போது தமிழகத்தில் நீதித்துறையும் மிகவும் மோசமடைந்து விட்டதாக நீதிபதிகளே தெரிவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
 மதுரையில் 100 அடி உயரத்துக்கு தமிழ்த்தாய் சிலை அமைப்பது அறிவிப்புடன் நின்றுவிட்டது. கோவையில் கடந்த 2006 முதல் அவிநாசி - அத்திக்கடவு திட்டம், மோனோ ரயில் திட்டங்களும் கிடப்பில் போடப்பட்டுள்ளன. எனவே, தமிழகத்தை ஆண்ட 2 கட்சிகளும் இனி தேவையில்லை என்றார் விஜயகாந்த்.
 இதில், தேமுதிக மகளிரணித் தலைவர் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், "தென்னிந்தியாவின் மான்செஸ்டரான கோவையும், டாலர் சிட்டி என்று பெயர் பெற்ற திருப்பூரும் தற்போது மிகவும் நலிவடைந்துள்ளன.
 வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக ஆட்சிக்கு வந்தால் ஊழலற்ற நேர்மையான ஆட்சியை வழங்கி, மக்கள் நலனில் அக்கறை செலுத்தப்படும்' என்றார்.
 இவ்விழாவில், கட்சித் தொண்டர்களுக்கு தையல் இயந்திரம், தள்ளு வண்டி, வேன், ஆட்டோ உள்ளிட்ட ரூ. 25 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.