விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

அரசுப் பள்ளி ஆசிரியை வீட்டை உடைத்து நகை திருட்டு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியை வீட்டை உடைத்து பீரோவில் இருந்த நகைகளைத் திருடிச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகிறார்கள்.

News image
Updated On :14 செப்டம்பர் 2015, 2:00 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியை வீட்டை உடைத்து பீரோவில் இருந்த நகைகளைத் திருடிச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகிறார்கள்.

கிருஷ்ணன் கோவில், ஸ்ரீராம் நகரைச் சேர்ந்தவர் நடராஜன் மனைவி அனிதா. இவரது கணவர் இறந்துவிட்டார். அனிதா சீலநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக வேலை செய்து வருகிறார்.

சனிக்கிழமை மதியம் வீட்டை பூட்டிவிட்டு ஊருக்குச் சென்றுள்ளார். திரும்பி இன்று காலை (திங்கள்கிழமை) வந்து பார்த்தபோது, வீட்டின் கிரில் கேட் உடைக்கப்பட்டிருந்துள்ளது. உள்ளே இருந்த மரக்கதவையும் உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர் பீரோவில் இருந்த 3 பவுன் தங்க பொருட்கள் மற்றும் 8 ஜோடி வெள்ளி கொலுசுகளைத் திருடிச் சென்றுள்ளார்.

இது குறித்து ஆசிரியை அனிதா, கிருஷ்ணன்கோவில் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.