சிவகாசி அருகே குடிநீர் மற்றும் கழிவு நீர் வாறுகால் வசதி அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆட்சியரிடம் கிராம மக்கள் கோரிக்கை மனுவை அளித்தனர்.
இது குறித்து சிவகாசி ஊராட்சி ஒன்றியம் சுக்கிரிவார்பட்டியைச் சேர்ந்த கிராம மக்கள் ஆட்சியர் வே.ராஜாராமனிடம் இன்று நேரில் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:
இக்கிராமத்தில் 40-க்கும் மேற்பட்ட அருந்ததியர் குடும்பத்தினர் வசித்து வருகிறோம்.
இப்பகுதியில் கடந்த 4 ஆண்டுகளாக குடிநீர் வசதியில்லாமல் இருந்து வருகிறோம். அதேபோல், கழிவு நீர் வாறுகால் மற்றும் மயான வசதியும் இல்லாத நிலையிருக்கிறது. இது குறித்து சிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்துள்ளோம். இதுவரையில் அடிப்படை பணிகள் செய்து கொடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், எங்கள் தெருப் பகுதியில் மட்டும் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளாமல் காலதாமதம் செய்து வருகின்றனர்.
மேலும், குடிநீருக்காக ஒரு கி.மீ தூரம் வரையில் நடந்து சென்று பிடித்து வரவேண்டிய சூழ்நிலையுள்ளது. அதனால், சுகாதாரமான குடிநீர் மற்றும் கழிவு நீர் வாய்க்கால் வசதி அமைத்து தர வலியுறுத்தி ஆட்சியரிடம் அளித்த மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கள்ளச்சந்தையில் மதுபாட்டில் விற்ற பெண் கைது

நாளை பிரசாரம் நிறைவு: வேட்பாளா்கள் தீவிர வாக்கு சேகரிப்பு

முதல்முறையாக ஆழ்கடலில் மீன்பிடிப்புக்கு சென்று திரும்பிய படகுகள்

பிஏபி வாய்க்காலில் இருந்து அரசுப் பேருந்து ஓட்டுநா் சடலம் மீட்பு
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

