விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் வருகிற 18ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முாகம் நடைபெற இருப்பதாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ராமநாதன் தெரிவித்துள்ளார்.
உலகின் பலநாடுகளில் கிளைகள் உள்ள பிரசித்தி பெற்ற தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு கார்பெண்டர், மேன்சன், கம்பி கட்டுநர் ஆகிய வேலைகளுக்கு ஆள்கள் தேவைப்படுகிறது. இதற்கு 5 -ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையில் படித்திருக்க வேண்டும். முன் அனுபவம் எதுவும் தேவையில்லை.
இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 3 மாத பயிற்சிக்கு பின் பணியில் அமர்த்தப்படுவார்கள். இவர்களுக்கு மாதந்தோறும் ரூ.8 ஆயிரம் சம்பளம் மற்றும் உணவு தங்குமிடம் விலையில்லாமல் அளிக்கப்படும். இப்பணிக்கு 18 வயது முதல் 35 வயதிற்குள் உள்ள ஆண்கள் மட்டும் தேர்வு செய்யப்படுவர். மேலும், ஐ.டி.ஐ எலெக்ட்ரீசியன், பிளம்பிங், வெல்டிங் படித்தவர்களுக்கு 3 மாதம் துறைச்சார்ந்த பயிற்சி அளிக்கப்படும்.
எனவே இப்பணியில் சேர ஆர்வமுள்ளோர் தங்கள் கல்வி தகுதிக்கான சான்று, ஆதார் அட்டை, ரேசன்கார்டு நகல் மற்றும் புகைப்படம் ஆகியவைகளுடன் வருகிற 18ம் தேதி விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயனடையுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் தோட்டத் தொழிலாளா்களுக்கு வீடு! முன்னாள் அமைச்சா் எஸ்.பி. வேலுமணி

பேச்சிப்பாறையில் பழங்குடி மக்களிடம் மாா்க்சிஸ்ட் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

வேட்பாளா்களின் சின்னம் அடங்கிய வாக்குச்சீட்டு பொருத்தும் பணி நிறைவு

அரசு மதுபானக் கடைகளுக்கு ஏப்.21 முதல் 23 வரை விடுமுறை
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

