லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து தொழிலாளி காயம்: 2பேர் மீது வழக்கு

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி படுகாயம் அடைந்தார்.

News image
Updated On :16 செப்டம்பர் 2015, 12:54 pm

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி படுகாயம் அடைந்தார்.

விருதுநகர் அருகே உள்ள கோவிந்தநல்லூரைச் சேர்ந்தவர் முனீஸ்வரன்(45). இவர் சொந்தமாக இக்கிரமத்தில் பட்டாசு ஆலையை நடத்தி வருகிறார். இ்ந்த ஆலையில் பட்டாசு தயார் செய்வதற்கான மூலப்பொருள்கள் மருந்து கலவை வைப்பறையில் தனித்தனியாக வைக்கப்பட்டிருந்ததாம். அதில், கரித்துகள் மூட்டையில் அதிகாலையில் புகையாக கிளம்பியதாம்.

இதை அங்கிருந்த பாதுகாவலர் பார்த்து உடனே உரிமையாளர் முனீஸ்வரனுக்கு தகவல் தெரிவித்தாராம். அதைத்தொடர்ந்து முதலிப்பட்டியைச் சேர்ந்த தொழிலாளி பாண்டியராஜனை உடனே சென்று பார்க்கும்படி கூறினாராம். உடனே ஆலையில் குறிப்பிட்ட அறைக்குச் சென்று பார்க்கும் புகைந்து கொண்டிருந்ததை பார்த்து உடனே தண்ணீர் வாளியை தூக்கி ஊற்றியுள்ளார். அப்போது, அவர் மீது குபீரென தீ பரவியதில் காயம் அடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதைத் தொடர்ந்து சிவகாசி தீயணைப்பு துறையினருக்கு தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை மேலும் அடுத்த அறைகளுக்கு பரவவிடாமல் போராடி அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.  

இது குறித்து வச்சக்காரப்பட்டி போலீஸார் மேற்பார்வையாளர் ராஜா மற்றும் தொழலாளி பாண்டியராஜன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.