விருதுநகர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிலைகள் பிரதிஷ்டை செய்யும் இடங்களில் 1500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக காவல் துறை கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா (வியாழக்கிழமை) சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. இவ்விழாவிற்காக பல்வேறு பகுதிகளில் சிலைகளை பிரதிஷ்டை வழிபாடு நடத்துவதற்காக குறைந்தது 5 அடி முதல் 15 அடி உயரம் வரையி்ல் விநாயகர் சிலைகளை வடிவமைத்துள்ளனர்.
இம்மாவட்டத்தில் உள்ள விருதுநகர், சிவகாசி, அருப்புக்கோட்டை, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர், திருச்சுழி ஆகிய பகுதிகளில் மொத்தம் 263 இடங்களில் 330 விநாயகர் சிலைகள் குறிப்பிட்ட இடங்களில் வழிபாடு செய்வதற்காக பிரதிஷ்டை செய்துள்ளனர்.
இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி விழாவில் அசம்பாவிதம் ஏற்பாடமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவும் உள்ளனர். இதில், ஒவ்வொரு சிலை வைக்கப்பட்டுள்ள பகுதிகளில் 2 போலீஸார் வீதம் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். இவர்கள் பணியில் ஈடுபட்டுள்ளார்களா என்பதை கண்காணிக்க அந்தந்தப் பகுதி காவல் நிலைய விவகார எல்லைக்கு உள்பட்ட பகுதியைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் மற்றும் சார்பு-ஆய்வாளர் ஆகியோர் அடிக்கடி வாகன ரோந்து செய்து சரிபார்க்க வேண்டும்.
இக்குறிப்பிட்ட நாள்களில் பஸ் நிலையம், முக்கிய வழிபாட்டு தலங்கள், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளிலும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக காவல் துறை கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் தோட்டத் தொழிலாளா்களுக்கு வீடு! முன்னாள் அமைச்சா் எஸ்.பி. வேலுமணி

பேச்சிப்பாறையில் பழங்குடி மக்களிடம் மாா்க்சிஸ்ட் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

வேட்பாளா்களின் சின்னம் அடங்கிய வாக்குச்சீட்டு பொருத்தும் பணி நிறைவு

அரசு மதுபானக் கடைகளுக்கு ஏப்.21 முதல் 23 வரை விடுமுறை
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

