விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

லாரி மோதிய விபத்து: கால்நடை உதவி மருத்துவர் சாவு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே லாரி மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற கால்நடை உதவி மருத்துவர் உயிரிழந்தார். மேலும் உடன் வந்த மற்றொரு மருத்துவர் பலத்த காயம் அடைந்தார்.

News image
Updated On :20 செப்டம்பர் 2015, 5:13 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே லாரி மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற கால்நடை உதவி மருத்துவர் உயிரிழந்தார். மேலும் உடன் வந்த மற்றொரு மருத்துவர் பலத்த காயம் அடைந்தார்.

ராஜபாளையம், ஸ்ரீராம்நகரைச் சேர்ந்தவர் காளியப்பன் மகன் ஆனந்தன் (49). இவர் உப்பத்தூர் கால்நடை மருத்துவமனையில் உதவி மருத்துவராக வேலை செய்து வந்தார். ராஜபாளையம் பொன்னுரங்கன் தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் ராமசுப்பிரமணியன் (42). இவர் நல்லமங்கலம் கால் நடை மருத்துவமனையில் உதவி மருத்துவராக வேலை செய்து வருகிறார்.

சனிக்கிழமை இரவு கிருஷ்ணன்கோவில் அருகேயுள்ள பாட்டக்குளத்தில் கால்நடைகளுக்கு மருத்துவம் பார்த்துவிட்டு இரு சக்கர வாகனத்தை ஆனந்தன் ஓட்ட, பின்னால் ராமசுப்பிரமணியன் அமர்ந்து ராஜபாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்-ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில், வன்னியம்பட்டி விலக்கு அருகே எதிரே வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது. இதில் ஆனந்தன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ராமசுப்பிரமணியன் பலத்த காயமுற்று ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வன்னியம்பட்டி போலீஸில் ராமசுப்பிரமணியன் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்ட லாரியைத் தேடி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.