லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

விருதுநகர் மாவட்டத்தில் கடவுச்சீட்டு பெற பொது இ.சேவை மையங்களில் ஆன்லைனில் விண்ணபிக்க ஏற்பாடு

அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் செயல்பட்டு வரும் பொது இ.சேவை மையங்களில் கடவுச் சீட்டு பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பயன்பெறுமாறு பொதுமக்களை ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Updated On :22 செப்டம்பர் 2015, 2:35 pm

அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் செயல்பட்டு வரும் பொது இ.சேவை மையங்களில் கடவுச் சீட்டு பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பயன்பெறுமாறு பொதுமக்களை ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக ஆட்சியர் வே.ராஜாராமன் இன்று(செவ்வாய்கிழமை) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி மூலம் செயல்பட்டு வரும் பொது  இ.சேவை மையங்களில் ஆன்லைன் மூலம் கடவுச் சீட்டுக்கு (பாஸ்போர்ட்) விண்ணப்பிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

எனவே வட்டார பொது இ-சேவை மையங்களிலும் அந்தந்த வட்டார பகுதி பொதுமக்கள் கடவுச் சீட்டுக்கு விண்ணப்பிக்கலாம். புதிதாக கடவுச் சீட்டு பெற விரும்புவோர், கடவுச் சீட்டை புதுப்பிக்க விரும்புவோர் இச்சேவை மையங்களை அணுகி உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். இம்மையங்களில் உள்ள பணியாளர்கள் விண்ணப்பதாரரின் ஆவணங்களை சரிபார்த்து கடவுச் சீட்டு பெறுவதற்கான தகவல்களை ஆன்-லைன் மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்வர்.

அதைத் தொடர்ந்து அந்தந்த மண்டலத்துக்கு உள்பட்ட பாஸ்போர்ட் அலுவலகங்களுக்குச் செல்லவதற்கான அனுமதி நாள், நேரம் ஆகியவற்றையும் சேவை மையங்களிலேயே பெற்றுக் கொள்ளலாம். இச்சேவைக்காக மத்திய அரசு கட்டணம் ரூ.1,500, தமிழக அரசின் கேபிள் டிவி சேவை மையத்துக்கான கட்டணம் ரூ.100, பாரத ஸ்டேட் வங்கியின் சேவைக் கட்டணம் ரூ.55 என மொத்தம் ரூ.1,655 கட்டணமாக செலுத்த வேண்டும்.

எனவே இம்மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் செயல்பட்டு வரும் பொது இ.சேவை மையங்களை அணுகி பயனடையுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.