விருதுநகர் மாவட்டத்தில் நிகழாண்டில் கோ-ஆப்டெக்ஸ் சிறப்பு தள்ளுபடி மூலம் ரூ.71 லட்சத்திற்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் வே.ராஜாராமன் தெரிவித்தார்.
விருதுநகர் தெப்பம் பஜார் பகுதியில் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை மைய வளாகத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையின் தொடக்க விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் வே.ராஜாராமன் தலைமை வகித்து முதல் விற்பனையை தொடங்கி வைத்து பேசியதாவது:
தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் 1925ல் தொடங்கி, தொடர்நது 80 ஆண்டுகளாக நெசவாளர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் சிறப்பான சேவையை அளித்து வருகிறது. இந்நிலையில், கைத்தறி ரகங்களின் விற்பனை அதிகரிக்கும் வகையில் ஆண்டுதோறும் திருவிழாக் காலங்களில் 30 சதவீதம் தள்ளுபடி விற்பனையும் செய்து வருகிறது. அதேபோல், நிகழாண்டில் தீபாவளி திருநாளை முன்னிட்டு கோ.ஆப்டெக்ஸ் அனைத்து ரகங்களுக்கும் 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி அளிக்கப்படுகிறது. அதேபோல், திருவிழா காலங்களில் பல்வேறு வண்ணங்களில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பலவித வடிவமைப்புகளில் பருத்தி, பட்டுச்சேலைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள் மற்றும் நவீன காலத்திற்கு ஏற்ப ஜீன்ஸ் டாப்ஸ், குர்தா வேட்டி, சேலைகள், சிடிதார் மற்றும் வெண்பட்டுச்சேலைகள் ஆகியவை தீபாவளி திருநாளுக்காக வாடிக்கையாளர்கள் விரும்புகிற ரகங்கள் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை வைக்கப்பட்டுள்ளது.
அதோடு, உடல்நலத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்ப ரசாயன உரங்கள் இல்லாமல், இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பருத்தியைக் கொண்டு, இயற்கை சாயமிட்ட ஆர்கானிக் புடவை ரகங்கள், பாரம்பரிய ரகங்களை புதுப்பிக்கும் விதமாக கண்டாங்கி சேலைகள், செட்டிநாடு சேலைகள், கைத்தறி சுங்கிடி சேலைகள் விற்பனைக்கு வந்துள்ளன. அதேபோல், ஆண்களுக்கான லினன் சட்டைகள், லினன் பருத்தி சட்டைகள் ஆகியவை பல்வேறு வண்ணங்களில் உள்ளன. அதேபோல், கோ.ஆப்டெக்ஸ் வணிக வலைதளமான www.cooptex.com என்ற இணைய தளத்தின் மூலமும் பெற்றுக் கொள்ளலாம்.
மதுரை மண்டல கட்டுப்பாட்டில் இயங்கி வரும் 20 விற்பனை நிலையங்களின் மூலம் கடந்தாண்டு ரூ.24.84 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதேபோல், நிகழாண்டில் ரூ.30 கோடிக்கு விற்பனை செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில், விருதுநகர் விற்பனை நிலையத்தின் மூலம் கடந்தாண்டு 58.61 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் நிகழாண்டில் ரூ.71 லட்சத்திற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அதற்கு முன்னதாக கோ.ஆப்டெக்ஸ் மூலம் முதல் சிற்பபு தள்ளுபடி விற்பனையை பயனாளிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.
இதில், நகராட்சி தலைவர் மா.சாந்தி, கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக குழு உறுப்பினர் மஞ்சுளா, மதுரை மண்டல மேலாளர் ரஞ்சனி, முதுநிலை மேலாளர் கோ.அன்பழகன், மேலாளர் பழனிச்சாமி, துணை மண்டல மேலாளர்(நிர்வாகம்) ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை விற்பனை மேலாளர் மணிவண்ணன் மற்றும் கோ.ஆப்டெக்ஸ் ஊழியர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கள்ளச்சந்தையில் மதுபாட்டில் விற்ற பெண் கைது

நாளை பிரசாரம் நிறைவு: வேட்பாளா்கள் தீவிர வாக்கு சேகரிப்பு

முதல்முறையாக ஆழ்கடலில் மீன்பிடிப்புக்கு சென்று திரும்பிய படகுகள்

பிஏபி வாய்க்காலில் இருந்து அரசுப் பேருந்து ஓட்டுநா் சடலம் மீட்பு
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

