அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

விருதுநகர் அருகே துள்ளுமாரியம்மன் கோயில் திருவிழா

விருதுநகர் அருகே துள்ளுமாரியம்மன் திருக்கோயில் புரட்டாசி திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு ரூ.2.50 லட்சத்தில் ரூபாய் நோட்டுக்களில் சிறப்பு  அலங்காரம் செய்திருந்தனர்.

News image
Updated On :26 செப்டம்பர் 2015, 2:43 pm

விருதுநகர் அருகே துள்ளுமாரியம்மன் திருக்கோயில் புரட்டாசி திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு ரூ.2.50 லட்சத்தில் ரூபாய் நோட்டுக்களில் சிறப்பு  அலங்காரம் செய்திருந்தனர்.

விருதுநகர் அருகே ரோசல்பட்டி ஊராட்சி அலுவலகம் எதிரே உள்ளது துள்ளுமாரியம்மன் திருக்கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி பொங்கல் திருவிழா ஒரு வாரம் வரையில் சிறப்பாக நடைபெறும். தற்போது, இத்திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி, தொடர்ந்து ஒரு வாரம் நடைபெற இருக்கிறது. இத்திருவிழாவில் ஒவ்வொரு நாளும் பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்துவோர் அளிக்கும் நன்கொடை மூலம் காய்கறி அலங்காரம், இளநீர் மற்றும் பழ வகைகள் அலங்காரம், பல்வேறு வகையான பூக்கள் அலங்காரம், சந்தனக்காப்பு அலங்காரம், குங்கும பொன் நகை அலங்காரம் உள்ளிட்ட பல்வேறு வகை அலங்காரங்களுடன் பக்தர்களுக்கு துள்ளுமாரியம்மன் தரிசனம் அளிப்பார்.

அந்த வகையில் சனிக்கிழமை ரூ.2.50 லட்சத்தில் ரூபாய் நோட்டுக்கள் மாலை அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இவ்விழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜை செய்து பொங்கல் படையல் பிரசாதமும் பக்தர்களுக்கு வழங்கப்படும். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை இத்திருக்கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.