அருப்புக்கோட்டையில் குடிநீர் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் இன்று சாலைமறியலில் ஈடுபட்டனர்.
அருப்புக்கோட்டை 28-வது வார்டைச் சேர்ந்த நாகலிங்கநகர் பகுதியில் கடந்த ஒரு மாதமாக சரியாக குடிநீர் விநியோகம் செய்யவில்லையாம். இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் மனுவும் அளித்துள்ளனர். ஆனால், இதுவரையில் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இந்நிலையில் பொதுமக்கள் குடிநீர் விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வந்துள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் விருதுநகர் பிரதான சாலையில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து விரைந்து வந்த நகர் காவல் நிலைய போலீஸார் மற்றும் நகராட்சி அலுவலர்கள் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, குடிநீர் விநியோகம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்படும் என சமரசம் செய்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் விருதுநகர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரைமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கேரளத்தில் கிருஷ்ணர் அசைவ உணவருந்துவதாகச் சித்திரித்து விளம்பரம்: ஹோட்டல் உரிமையாளர்கள் கைது!

அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்

பிரியான்ஷ் ஆர்யா, கூப்பர் கானலி அதிரடி: லக்னௌவுக்கு 255 ரன்கள் இலக்கு!

மேற்கு வங்க தேர்தலுக்குப்பின் மணிப்பூருக்கு கூடுதலாகப் பாதுகாப்புப் படைகள் வருகை: மணிப்பூர் அரசு
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

