அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

விருதுநகரில் பெண்ணிடம் 5 சவரவன் நகை பறிப்பு: 2 பேர் கைது

விருதுநகரில் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் மனைவியிடம் 5 சவரன் நகை பறிப்பு சம்பவம் தொடர்பாக ரயில்வே ஊழியர் உள்பட 2 பேரை இன்று  போலீஸார் கைது செய்தனர்.

Updated On :29 செப்டம்பர் 2015, 3:00 pm

விருதுநகரில் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் மனைவியிடம் 5 சவரன் நகை பறிப்பு சம்பவம் தொடர்பாக ரயில்வே ஊழியர் உள்பட 2 பேரை இன்று  போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகர் சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ரயில் ஊழியர்  சுபாஷ்சந்திரபோஸ்(61). இவர் மனைவி ராஜேஸ்வரி கடந்த ஜூலை மாதம் சென்னையில் இருந்து முத்துநகர் விரைவு ரயிலில் வந்தார்.

அப்போது ரயில் தண்டவாளம் வழியாக செல்கையில் அப்பகுதியில் 4 பேர் நின்றிருந்தனர். அதில், சரக்கு ரயிலை கடக்க குனிந்து செல்லும் படியும் கூறினார்களாம். குனிந்தபோது அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் நகையை பறித்துக் கொண்டு தப்பியோடினார்களாம்.

இது குறித்து விருதுநகர் ரயில்வே போலீஸாரிடம் ராஜேஸ்வரி புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இது தொடர்பாக விசாரணை செய்ததில் திண்டுக்கல் ரயில்வே டிரக்மேன் கோமதிநாயகம்(35), விருதுநகர் பாண்டியன் நகரைச் சேர்ந்த சேகர்(45) ஆகியோரை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 5 சவரன் நகையையும் பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.