நெய்வேலியில் நகைக்கடையை துளை போட்டு மர்ம நபர்கள் கைவரிசை
நெய்வேலி மந்தாரகுப்பத்தில் நகைக்கடையை துளை போட்டு தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பண்ருட்டி: நெய்வேலி மந்தாரகுப்பத்தில் நகைக்கடையை துளை போட்டு தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றிரவு மந்தாரகுப்பத்தில் உள்ள நகைக்கடையில் மர்ம நபர்கள் சிலர் கடையைத் துளை போட்டு சுமார் 1-1/2 கிலோ தங்க நகைகள் மற்றும் 25 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். கடை துளை போட்ட சம்பவத்தை பார்த்த அக்கம் பக்கத்தினர் கடை உரிமையாளருக்குத் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் நேரில் ஆய்வு செய்து கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...