யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

சேலம் உருக்காலை பங்குகளை விற்க மாநிலங்களவையில் திமுக கடும் எதிர்ப்பு!

தமிழகத்தின் முக்கிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான சேலம் உருக்காலையின் பங்குகளை தனியாருக்கு விற்கும் முடிவை கைவிட வேண்டும் என்று மாநிலங்களைவையில் திமுக எம்பி திருச்சி சிவா... 

News image
Updated On :2 டிசம்பர் 2016, 6:47 am

DIN

புதுதில்லி: தமிழகத்தின் முக்கிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான சேலம் உருக்காலையின் பங்குகளை தனியாருக்கு விற்கும் முடிவை கைவிட வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக எம்பி திருச்சி சிவா வலியுறுத்தினார். 

மாநிலங்களவையில் இன்று சேலம் உருக்காலையின் பங்குகளை தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து தமிழகம் சார்பாக திமுகவின் திருச்சி சிவா பேசினார். அப்பொழுது அவர் கூறியதாவது:

சேலம் உருக்காலையின் பங்குகளை தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் முடிவு கண்டனத்துகுரியது. இந்த ஆலை ஒன்றும் நஷ்டத்தில் இயங்கும் நிறுவனம் அல்ல. தொடர்ந்து லாபம் ஈட்டி வருகிறது. இந்த ஆலையின் மூலம் நேரடியாக 2500 பணியாளர்கள் வேலைவாய்ப்பை பெறுகின்றனர். அதே போல் மறைமுகமாக    பலருக்கும் இந்த ஆலை வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது. 

இவ்வாறு சிவா பேசினார். சிவாவின் இந்த பேச்சுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ரங்கராஜனும் ஆதரவு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.