ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

முதல்வர் ஜெயலலிதாவுக்கு 'திடீர் ' உடல்நலக் குறைவு?

உடல்நலக் குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டு தேறி வந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு இன்று மாலை மீண்டும் திடீர் உடல்நலக் குறைபாடு ஏற்பட்டதாக... 

News image
Updated On :4 டிசம்பர் 2016, 3:20 pm

DIN

சென்னை: உடல்நலக் குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டு தேறி வந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு இன்று மாலை மீண்டும் திடீர் உடல்நலக் குறைபாடு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைபாடு காரணமாக கடந்த செப்டம்பர் - 22 ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.பல்வேறு கட்ட தொடர் சிகிச்சைகளுக்கு பிறகு அவரது உடல் நலம் தேறி விட்டதாக முன்னாள் அமைச்சர் பொன்னையன் இன்று காலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று மாலை முதல்வர் ஜெயலலிதாவுக்கு 'திடீர்' உடல்நலக் குறைபாடு ஏற்பட்டதற்காகவும், அதைத் தொடர்ந்து அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.

சிகிச்சைக்கு பிறகு தற்போது அவரது உடல் நலம் சீராக உள்ளது என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.