பண்ருட்டி: ஜெயலலிதா பேரவைச் செயலாளர் மாரடைப்பால் மரணம்
பண்ருட்டி அருகே ஜெயலலிதா பேரவைச் செயலாளர் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.


பண்ருட்டி அருகே ஜெயலலிதா பேரவைச் செயலாளர் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.
சென்னை அப்பல்லா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த சன்னியாசிப்பேட்டை சேர்ந்த நீலகண்டன்(40) இவர் நேற்று மாலை முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குறித்த செய்தியை தொலைகாட்சியில் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து 108 அவரச வாகனத்தில் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். மருத்துவமனைக்கு சென்று செல்லும் வழியிலேயை உயிரிழந்துள்ளார்.
உயரிழந்த நீலகண்டன் ஜெயலலிதா பேரவைச் செயலாளராக இருந்து வந்துள்ளார். அவருக்கு மனைவி ஷாகிலா(38), 3 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் உள்ள கட்சியினரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...