வார்தா' புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய தமிழகம் வரும் மத்திய குழு!
கடந்த வாரம் சென்னையை தாக்கிய 'வார்தா' புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய தமிழகத்திற்கு மத்திய குழு அடுத்த வாரம் வர உள்ளது.


புதுதில்லி: கடந்த வாரம் சென்னையை தாக்கிய 'வார்தா' புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய தமிழகத்திற்கு மத்திய குழு அடுத்த வாரம் வர உள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான 'வார்தா' புயல் கடந்த 12-ம் தேதி அதிதீவிர புயலாக மாறி சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளை கடுமையாக தாக்கியது. புயல் காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட் டங்களில் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மேலும் மரங்களின் கிளைகள் உடைந்து விழுந்ததில் பெரும் சேதம் உண்டானது. அத்துடன் மின்சாரம், குடிநீர் வினியோகம் ஆகியவையும் கடுமையாக பாதிக்கப்பட்டன.
'வார்தா' புயல் நிவாரணப் பணிகளுக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.
இந்நிலையில்தான் 'வார்தா' புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய தமிழகத்திற்கு மத்திய குழு அடுத்த வாரம் வர உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சக இணை செயலர் தலைமையில் வர உள்ள இக்குழு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கலில் விரிவான ஆய்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...