விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தீர்மான நகலை வாங்கி ஜெயலலிதா படம் முன்பு வைத்து கண் கலங்கிய சசிகலா

அதிமுக பொதுச்செயலராக தன்னைத் தேர்வு செய்ததற்கான  தீர்மான நகலை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திடம் இருந்து பெற்ற சசிகலா, அதனை ஜெயலலிதா படத்தின் முன் வைத்து கண் கலங்கினார்.

News image
Updated On :29 டிசம்பர் 2016, 8:00 am

DIN


சென்னை: அதிமுக பொதுச்செயலராக தன்னைத் தேர்வு செய்ததற்கான  தீர்மான நகலை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திடம் இருந்து பெற்ற சசிகலா, அதனை ஜெயலலிதா படத்தின் முன் வைத்து கண் கலங்கினார்.

அதிமுக பொதுச் செயலராக வி.கே. சசிகலாவை தேர்வு செய்து, பொதுக்குழுக் கூட்டத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மான நகலை, முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உட்பட மூத்த நிர்வாகிகள் பலரும், வானகரத்தில் இருந்து போயஸ் தோட்ட இல்லத்துக்குச் சென்று, சசிகலாவை நேரில் சந்தித்து வழங்கினார்கள்.

அந்த நகலை பெற்றுக் கொண்ட சசிகலா, அதனை ஜெயலலிதாவின் திருவுருவப் படத்தின் முன் வைத்து கண் கலங்கினார்.

இவை அனைத்தும் போயஸ் தோட்ட இல்லத்தின் வாயிலில் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.