கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சசிகலாவை நேரில் சந்தித்து வாழ்த்திய திருமாவளவன்!

அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள சசிகலாவை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் நேரில் சந்தித்து, வாழ்த்து தெரிவித்தார்.

News image
Updated On :31 டிசம்பர் 2016, 2:30 pm

சென்னை: அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள சசிகலாவை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் நேரில் சந்தித்து, வாழ்த்து தெரிவித்தார்.

அதிமுகவின் புதிய பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள சசிகலா சனிக்கிழமை அன்று கட்சியின் தலைமை அலுவலகத்தூக்குவருகை தந்தார். பின்னர் பொதுச்செயலாளர் அறைக்குச் சென்று அங்கு இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்துக்கும் அஞ்சலி செலுத்தினார். அதன்பின்னர் அதிமுக பொதுச் செயலாளராக முறைப்படி கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.

அதன் பின்னர் அவரை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் நேரில் சந்தித்து, அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வின் போது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் உடன் இருந்தார்.

நிகழ்விற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் இந்த சந்திப்புக்கு அரசியல் காரணங்கள் எதுவும் இல்லை என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.