தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜரானார் எம்.எல்.ஏ சபா ராஜேந்திரன்
நெய்வேலி எம்.எல்.ஏ சபா ராஜேந்திரன், சுப வீர பாண்டியன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அழகிரி, பண்ருட்டி குற்றவியல் நீதிமன்றத்தில் என் 1-வது நீதிமன்றத்தில் ஆஜராகினர்.


பண்ருட்டி: நெய்வேலி எம்.எல்.ஏ சபா ராஜேந்திரன், சுப வீர பாண்டியன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அழகிரி, பண்ருட்டி குற்றவியல் நீதிமன்றத்தில் என் 1-வது நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
கடந்த 2011-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது தேர்தல் நடத்தை வீதிமுறைகள் மீறியதாக பாமக தலைவர் ராமதாஸ், தொல் திருமாளவன், தமிழக வாழ்வுமைரி கட்சித் தலைவர் நெப்போலியன் உள்ளிட்டவர் மீது குறிப்பிட்ட இடத்தை விற்று வேறு இடத்தில் பிரசாரம் செய்தது, ஒலிபெருக்கி சப்தத்தை கூடுதல் ஆக்கியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
வழக்கு மீதான சம்மன் அனுப்பப்பட்டதை அடுத்து, நெய்வேலி எம்.எல்.ஏ சபா ராஜேந்திரன், தீவிர இயக்க தமிழர் பேரவை பொது செயலாளர் சுபவீர பாண்டியன் ஆகியோர் பண்ருட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், குற்றவியல் நடுவர் எண் 1 சரவண பாபு முன்பு ஆஜராகினர். ஆஜராகி குற்ற நகலை பெற்றுக் கொண்டனர். இதனை தொடர்ந்து வழக்கு விசாரணை ஜூலை 12-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...