அடவிநயினார், சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் உயர்வு!
மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த மழையால் அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 4 அடி, சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 2 அடியும் உயர்ந்துள்ளது.


திருநெல்வேலி: மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த மழையால் அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 4 அடி, சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 2 அடியும் உயர்ந்துள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் மழை பெய்ததை தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது. சனிக்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணையில் 8 மி.மீ, சேர்வலாறு அணையில் 2 மி.மீ, கடனாநதி அணையில் 5 மி.மீ, ராமநதி அணையில் 2 மி.மீ, கருப்பாநதி அணையில் 4 மி.மீ, குண்டாறு அணையில் 23 மி.மீ, அடவிநயினார் அணையில் 19 மி.மீ, கொடுமுடியாறு அணையில் 10 மி.மீ, செங்கோட்டையில் 9 மி.மீ, நான்குனேரியில் 3 மி.மீ, களக்காட்டில் 5.2 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.
பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 1200 கனஅடி, சேர்வலாறு அணைக்கு விநாடிக்கு 550 கனஅடி, மணிமுத்தாறு அணைக்கு 12 கனஅடி, கடனாநதி அணைக்கு விநாடிக்கு 93.52 கனஅடி, ராமநதி அணைக்கு விநாடிக்கு 75.87 கனஅடி, அடவிநயினார் அணைக்கு 57 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.
குடிநீர், பாசனத்துக்கு பாபநாசம் அணையில் இருந்து 1054.75 கனஅடி, மணிமுத்தாறு அணையில் இருந்து பெருங்கால் பாசனத்துக்கு 75 கனஅடி, கடனாநதி அணையில் இருந்து 80 கனஅடி, ராமநதி அணையில் இருந்து 40 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
நீர்மட்டம் உயர்வு: பாபநாசம் அணையின் நீர்மட்டம் 78.40 அடி, சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 88.12 அடி, மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 71.28 அடி, கடனாநதி அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 56.50 அடி, ராமநதி அணையின் நீர்மட்டம் 1.25 அடி உயர்ந்து 64.50 அடி, கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 26.96 அடி, குண்டாறு அணையின் நீர்மட்டம் 32.75 அடி, அடவிநயினார் அணையின் 4 அடி உயர்ந்து 67.50 அடி, வடக்குப் பச்சையாறு அணையின் நீர்மட்டம் 20.90 அடி, நம்பியாறு அணையின் நீர்மட்டம் 12.34 அடி, கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 25 அடியாகவும் இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...