வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

நெல்லை: அரசு பேருந்து ஓட்டுநர் வீட்டில் ரூ. 2.50 லட்சம் நகை திருட்டு

பாளையங்கோட்டை அருகே அரசு பேருந்து ஓட்டுநர் வீட்டில் ரூ. 2.50 லட்சம் மதிப்புள்ள நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

News image
Updated On :13 ஜூலை 2016, 9:57 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி: பாளையங்கோட்டை அருகே அரசு பேருந்து ஓட்டுநர் வீட்டில் ரூ. 2.50 லட்சம் மதிப்புள்ள நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

பாளையங்கோட்டை வி.எம். சத்திரம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (50). அரசு விரைவுப் பேருந்து ஓட்டுநரான இவர் செவ்வாய்க்கிழமை வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் குரங்குனி கோயில் திருவிழாவில் கலந்து கொள்ளவதற்காக சென்றிருந்தாராம்.

புதன்கிழமை காலை வீடு திரும்பிய ராமச்சந்திரன் அதிர்ச்சியடைந்தார். வீட்டின் முன்பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே சென்று பீரோ மற்றும் சமையலறையில் டப்பாவில் மறைத்து வைத்திருந்த 12 பவுன் எடையுள்ள தங்கநகை, ரொக்கப் பணம் ரூ. 5 ஆயிரம் ஆகியவற்றை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 2.50 லட்சம்.

மர்ம நபர்கள் குத்துவிளக்கினால் பீரோவை உடைத்து தங்கநகைகளை திருடியுள்ளனர். தகவலறிந்த மாநகர காவல் துணை ஆணையர் பி. ராஜன், சம்பவ நடைபெற்ற வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினார். திருநெல்வேலி மாநகர குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.