வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயற்சி

திருநெல்வேலியில் திங்கள்கிழமை மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மனு அளிக்க விவசாயி மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

News image
Updated On :18 ஜூலை 2016, 10:32 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி: திருநெல்வேலியில் திங்கள்கிழமை மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மனு அளிக்க விவசாயி மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராதாபுரம் வட்டம், பழவூர் சிதம்பராபுரம் அடுத்துள்ள யாக்கோபுபுரம் கிராமத்தை சேர்ந்தவர் தங்கபாண்டி மகன் முத்துக்கிருஷ்ணன் (45). விவசாயி.  இவர் அப்பகுதியை சேர்ந்த 4 பேரிடம் ரூ. 9.50 லட்சம் கடன் வாங்கினாராம். முத்துகிருஷ்ணன் வாங்கியக் கடனுக்காக பல லடசம் மதிப்புள்ள 1.27 ஏக்கர் நிலத்தை மேற்கண்ட 4 பேரும் எழுதி வாங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.

இதில் பாதிக்கப்பட்ட முத்துகிருஷ்ணன், சம்பந்தபட்டவர்களிடம் நிலத்திற்குரிய முழுத் தொகையை கேட்டும் கொடுக்கவில்லையாம். இது தொடர்பாக திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் புகார் மனு அளிக்க முத்துக்கிருஷ்ணன் தனது மனைவி செந்தாமரைசெல்வி, மகள்கள் மோனிஷா, கமலிஷா, ரேனிஷா, அனிஷா ஆகியோருடன் வந்தார்.

குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்ற வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கு முன்பு திடீரென முத்துகிருஷ்ணன் தான் வைத்திருந்த மண்ணெண்ணையை தலையில் ஊற்றி தீ வைக்க முயன்றாராம். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸார் அதனை தடுத்து நிறுத்தி தண்ணீரை ஊற்றினர். பின்னர் விசாரணைக்காக பாளையங்கோட்டை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.