வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

தென்மண்டல மேஜைப்பந்து போட்டி: நெல்லையில் தொடங்கியது

தென்மண்டல அளவிலான ஆண், பெண் பங்கேற்கும் மேஜைப் பந்து போட்டி புதன்கிழமை பாளையங்கோட்டையில் தொடங்கியது.

News image
Updated On :27 ஜூலை 2016, 7:40 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி: தென்மண்டல அளவிலான ஆண், பெண் பங்கேற்கும் மேஜைப் பந்து போட்டி புதன்கிழமை பாளையங்கோட்டையில் தொடங்கியது.

ஆயுள் காப்பீடு கழகம் சார்பில் 50 ஆவது தென்மண்டல அளவிலான மேஜைப் பந்து போட்டிகள் 2 தினங்கள் பாளையங்கோட்டையில் நடைபெறுகிறது. புதன்கிழமை அண்ணா உள் விளையாட்டு அரங்கில் இப்போட்டியினை முதுநிலை கோட்ட மேலாளர் ஜெ. சுந்தரராஜன் தொடங்கி வைத்தார்.
வீரர்கள் அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்ச்சியை தொடர்ந்து போட்டிகள் தொடங்கின.
இப்போட்டியில் தமிழகத்தில் திருநெல்வேலி, மதுரை, தஞ்சை, வேலூர், கோவை, சேலம், சென்னை, கேரளாவில் திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோட்டயம், திருச்சூர், கோழிக்கோடு ஆகிய 13 கோட்டங்களி்ல் இருந்து 12 ஆண்களும், 8 பெண்களும் பங்கேற்கின்றனர்.

இந்நிகழ்ச்சியில், ஆயுள் காப்பீடு கழக வர்த்தக மேலாளர் கே. வெங்கடேசன், விளையாட்டு பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஏ. ராமமூர்த்தி, கோட்ட விளையாட்டுப்பிரிவு செயலர் எஸ். கிருஷ்ணசாமி, மேலாளர் ஏ. கிருஷ்ணவேனி, பயிற்றுநர் நேரு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் வெற்றி பெறும் ஆண், பெண் வீரர்கள் இருவர் அகில இந்திய அளவில் நடைபெறும் போட்டியில் விளையாடுகின்றனர். வியாக்கிழமை மாலை 3 மணிக்கு நடைபெறும் பரிசளிப்பு நிகழ்ச்சியில் வெற்றிப் பெற்றவர்களுக்கு ஆயுள் காப்பீடு கழக தென்மண்டல மனித வள மேம்பாட்டுத் துறை மேலாளர் கே. சேஷாத்திரிநாதன் பரிசுகள் வழங்குகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.